//]]>

Thursday, March 30, 2017

யாழ்.குடாநாட்டின் மரக்கறி விலைகள் சடுதியாக உயர்வு


யாழ். குடாநாட்டில் மரக்கறி விலைகளில் சடுதியான உயர்வு ஏற்பட்டுள்ளது.  

இதன்படி, யாழ்.குடாநாட்டின் முக்கிய சந்தைகளில் ஒன்றான திருநெல்வேலிப் பொதுச்  சந்தையில்  நேற்றுப் புதன்கிழமை(29) விலை நிலைவரப்படி, 

ஒரு கிலோ கறிமிளகாய்-180 ரூபா, ஒரு கிலோ வெண்டி-120 ரூபா,  ஒரு கிலோ  பயிற்றை-120 ரூபா, ஒரு கிலோ கரட்- 100 ரூபா முதல் 120 ரூபா வரை,  ஒரு கிலோ உருளைக்கிழங்கு-100 ரூபா முதல் 120 ரூபா வரை, ஒரு கிலோ வெங்காயப் பூ- 140 ரூபா, ஒரு கிலோ கத்தரி-100 ரூபா, ஒரு கிலோ தக்காளி-100 ரூபா , ஒரு கிலோ பச்சை மிளகாய்-100 ரூபா, ஒரு கிலோ  பெரிய வெங்காயம்-90 ரூபா, ஒரு கிலோ வெங்காயம்-80 ரூபா, ஒரு கிலோ லீக்ஸ்-80 ரூபா,ஒரு கிலோ கருணைக்கிழங்கு-80 ரூபா, ஒரு கிலோ பீற்ரூட்-60 ரூபா முதல் 70 ரூபா வரை, ஒரு கிலோ பூசணி-50 ரூபா முதல் 60 ரூபா வரை, ஒரு பிடி கீரை-60 ரூபா, ஒரு கிலோ கோவா-50 ரூபா, ஒரு கிலோ மரவள்ளிக் கிழங்கு-70 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டன. 

கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் மரக்கறிகளின் விலைகள் பெரும் வீழ்ச்சியடைந்த நிலையில் காணப்பட்டன. இந்தச் சூழலில் மரக்கறிகளின் திடீர் விலை உயர்விற்கு யாழ்.குடாநாட்டிலுள்ள பல்வேறு ஆலயங்களின் ஆலய உற்சவங்கள் மற்றும் விரத தினங்கள் ஆரம்பமாகியுள்ளமையும் , கடும் வெப்பமுடனான காலநிலை ஆரம்பித்திருப்பதுமே காரணமென வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.  

மரக்கறிகளின் திடீர் விலை உயர்வால் பொதுமக்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment