//]]>

Tuesday, March 14, 2017

பிரித்தானிய வெளியுறவுச் செயலரைச் சந்தித்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினர்


பிரித்தானிய வெளியுறவுச் செயலரும் South Ruislip மற்றும் Uxbridge பிரதேச பாராளுமன்ற உறுப்பினருமான Rt.Hon.Borriss Johnson அவர்களுக்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரித்தானிய அமைப்பினையும் தமிழ் மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்திச் சென்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாட்டாளர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று 10.03.2017 அன்று Uxbridge civic centre இல் நடைபெற்றது.

இச் சந்திப்பின் போது தாயகத்தில் இறுதிப் போரின் போது இடம்பெற்ற பாரிய யுத்தநிறுத்த மீறல்கள் தொடர்பான ஆதாரங்களும் தற்போதும் கடந்த காலங்களிலும் நடைபெற்ற, நடைபெற்றுவரும் தமிழின அழிப்பு தொடர்பான தகவல்களும் நா.க.த அரசாங்க செயற்பாட்டாளரால் எடுத்துக் கூறப்பட்டதுடன் இலங்கையில் இடம்பெற்ற யுத்தநிறுத்த மீறல்களை விசாரிக்க பன்னாட்டு கலப்பு நீதிமன்றமே அவசியம் என்பதை பிரித்தானிய அரசு ஐக்கிய நாடுகள் சபையில் வலியுறுத்த வேண்டும் எனவும் Rt.Hon.Borriss Johnson அவர்களிடம்
கேட்டுக்கொள்ளப்பட்டது.

ஒதுக்கப்ப்ட்ட நேரத்தைவிட சற்று அதிகமாகவே நடைபெற்ற இச்சந்திப்பில் பிரித்தானிய வெளியுறவுச் செயலர் மிகவும் கவனமாக அனைத்து விடயங்களையும் செவிமடுத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட  Monitoring and Accountability Panel (MAP) உடைய இலங்கையின் யுத்தக்குற்ற உள்ளகப் பொறிமுறை தொடர்பிலான அறிக்கை கையளிக்கப்பட்டதுடன், சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான இலங்கைக்கான செயற்திட்டத்தினுடைய (ITJPSL) இறுதியாக வெளிவந்த இலங்கையில் தற்போதும் இடம்பெறும் சித்திரவதைகள் பற்றிய அறிக்கையும் கையளிக்கப்பட்டது. அத்துடன் இலங்கையில நடைபெற்ற யுத்தக் குற்றங்களுக்கு பொறுப்புக்கூற மேலும் 24 மாத கால அவகாசத்தை இலங்கைக்கு வழங்க பிரித்தானியா ஆதரவளிக்ககூடாது எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

மற்றும் இவ்விடயங்களை பிரித்தானிய பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வருமாறு பல கோரிக்கைகள் அடங்கிய மகஜரும் கையளிக்கப்பட்டது.

அனைத்து ஆதாரங்களையும் பெற்றுக்கொண்ட பிரித்தானிய வெளியுறவுச் செயலர் இலங்கையின் யுத்தக்குற்ற மீறல்கள் தொடர்பில் தாம் கவனம் செலுத்துவதாகவும், யுத்த நிறைவில் சரணடைந்து காணாமல்
ஆக்கப்பட்டோர் தொடர்பில் தாம் ஒரு பதிலை பெற்றுத்தருவதாகவும்
உறுதியளித்தார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment