மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ்.குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை செவ்வாய்க்கிழமை(18) காலை-09 மணி முதல் பிற்பகல்-06 மணி வரை மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, இடைக்காடு, வளலாய், பாரதி வீதி, பத்தமேனி, தம்பாலை ஆகிய பிரதேசங்களில் மின்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் இலங்கை மின்சார சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.
0 comments:
Post a Comment