//]]>

Monday, April 17, 2017

50 ஆவது நாளை எட்டிய போதும் அவலத்துடன் தொடரும் வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்: கண்டு கொள்ளாத மத்திய மாகாண அரசாங்கங்கள்(Photos)


வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் தமக்கான நிரந்தர அரசாங்க வேலைவாய்ப்பைப்  கோரி யாழ். மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக நடாத்தி வரும் காலவரையற்ற கவனயீர்ப்புப் போராட்டம் இன்று திங்கட்கிழமை(17) 50 ஆவது நாளை எட்டிய போதும் தீர்வின்றி அவலத்துடன் தொடர்கிறது. எனினும், தமது போராட்டத்தை வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் கண்டு கொள்ளவில்லை என வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் வேதனை தெரிவித்தனர். 

காலவரையற்ற போராட்டம் ஆரம்பமாகி 50 ஆவது நாளை முன்னிட்டு வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளால் பொதுமக்களை விழிப்புணர்வூட்டும் வகையிலான துண்டுப் பிரசுரங்கள் இன்றைய தினம் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளதுடன், குறித்த துண்டுப் பிரசுரங்கள் இன்று பிற்பகல்-01 மணி முதல் யாழ். மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக வைத்துப் பொதுமக்களுக்கு வழங்கி வைக்கும் செயற்பாடுகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.  

இவ்வாறு வெளியிடப்பட்டுள்ள துண்டுப் பிரசுரங்களை யாழ். குடாநாட்டின் பல்வேறிடங்களுக்கும் சென்று விநியோகிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன், தமது தொடர் போராட்டத்தின் வடிவத்தை மாற்றுவது தொடர்பிலும் இன்று விசேட கலந்துரையாடலொன்றை மேற்கொண்டனர். 



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment