அந்தமான் அருகே வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நிலை கொண்டு இருந்தது.
இது நேற்று மாலை 5.30 மணிக்கு தீவிர காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியது. இந்நிலையில், இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், மேலும் வலுப்பெற்று இன்று நள்ளிரவு 2.30 மணி அளவில் புயலாக மாறியுள்ளது என்று, சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில், "இந்தப் புயலுக்கு 'மாருதா' என பெயரிடப்பட்டுள்ளது. இது அந்தமானில் இருந்து, மியான்மர் நோக்கி நகர்ந்து வருகிறது. வருகின்ற 17-ம் தேதி (நாளை) காலை, இந்தப் புயல் கரையைக் கடக்கும்.
இதனால், தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை. தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும். ஓரிரு பகுதிகளில், இன்று இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது" என்றனர்.
0 comments:
Post a Comment