//]]>

Wednesday, June 7, 2017

யாழ். வரணியில் மின்சாரம் தாக்கி 71 வயது முதியவர் உயிரிழப்பு


வீதியில் அறுந்த நிலையில் காணப்பட்ட மின்சார வயரிலிருந்து பாய்ந்த மின்சாரத்தால் தாக்குண்ட நிலையில் 71 வயது முதியவரொருவர் பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் யாழ். வரணிப் பகுதியில் புதன்கிழமை(07) இரவு இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நேற்றுப் புதன்கிழமை மாலை காற்றுடன் பெய்த கடும் மழை காரணமாக வரணி வீதியில் மின்சார வயர் அறுந்து கீழே விழுந்துள்ளது.

இந்த நிலையில் சலூன் நிலையமொன்றை நடாத்தி வரும் முதியவர் வழமை போன்று விற்பனை நிலையத்தைப் பூட்டி விட்டு மேற்படி வீதியால் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார். இதன் போது நிலத்தில் அறுந்து விழுந்து கிடந்த மின்சார வயரில் தூக்கியெறியப்பட்டு உயிரிழந்துள்ளார். குறித்த முதியவரின் சடலம் அப்பகுதி இளைஞர்களால் மீட்கப்பட்டுச் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் சாவகச்சேரிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment