//]]>

Monday, July 24, 2017

மட்டக்களப்பில் சிறப்பு அதிரடிப்படையினர் சூடு – தப்பியோடிய இளைஞன் பலியானதால் பதற்றம்


சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரின் துப்பாக்கிச் சூட்டை அடுத்து, ஆற்றில் குதித்த இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி மரணமானதை அடுத்து, மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் பொதுமக்களுக்கும் சிறிலங்கா காவல்துறையினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

 மட்டக்களப்பு- கரடியனாறு, முந்தன்குமாரவெளி ஆற்றில் மணல் அள்ளிக் கொண்டிருந்தவர்களை நோக்கி, சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் இன்று பிற்பகல் 12.30 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

 அவர்களிடம் இருந்து தப்பிக்க, ஆற்றில் குதித்த கொம்மாந்துறையைச் சேர்ந்த சதாகரன் மதுசன் என்ற 17 வயதுடைய இளைஞன் நீரில் மூழ்கி மரணமானார். இவரது சகோதரனான சதாகரன் கிசாந்தன் என்ற 18 வயதுடைய இளைஞன் ஆபத்தான நிலையில் செங்கலடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 இந்த சம்பவத்தை அடுத்து, அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. சிறிலங்கா காவல்துறையினருடன் பொதுமக்கள் வாக்குவாதப்பட்டனர். துப்பாக்கிச் சூடு நடத்திய சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்தவரை தம்முன்பாக அடையாளப்படுத்தி கைது செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் திரண்டு போராட்டம் நடத்தி வருவதால், முறுகல் நிலை தோன்றியுள்ளது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment