//]]>

Monday, July 24, 2017

யாழில் மீண்டும் எரிபொருளுக்கு பாரிய தட்டுப்பாடு: நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள் (Video, Photos)


பெற்றோலிய தொழிற்சங்கத்தினர் இன்று நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில் யாழ் மாவட்டத்திலுள்ள சகல எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் மக்கள் நீண்ட வரிசைகளில் அலைமோதுவதனை காணக் கூடியதாக உள்ளது.

நீண்ட வரிசையையும் பொருட்படுத்தாமல் காத்து நின்று எரிபொருளை நிரப்பி வருகின்றனர்.
யாழ் நகரிலுள்ள பெரும்பாலான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மோட்டார் சைக்கிளிற்கு 300 ரூபாய்க்கு மேல் பெற்றோல் நிரப்புவது நிறுத்தப்பட்டுள்ளது.

 அதே போல் கார்கள் உள்ளிட்ட வாகனங்களிற்கும் அதற்கு தகுந்தாற்போல் மட்டுப்படுத்தப்பட்டே எரிபொருள் விநியோகிக்கப்பட்டு வருகிறது.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment