//]]>

Tuesday, August 15, 2017

சுதந்திர தினத்தில் தூய்மைப் பணியை முன்னெடுத்த மாணவர்கள்

தமிழகத்தின் சென்னையில் உள்ள வேளச்சேரி - தாம்பரம் நெடுஞ்சாலையில் பள்ளிக்கரணை அருகிலுள்ள ஆசான் நினைவு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப் பணித்திட்டத்தின் சார்பில் 71 ஆவது சுதந்திர தினம் 15.08.2017 அன்று கல்லூரி வளாகத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. 

கல்லூரி துணைத்தலைவர் Dr. E.K. புருஷோத்தமன் கலந்து கொண்டு தேசியக்கொடியினை ஏற்றிச் சிறப்புரை வழங்கினார். கல்லூரி முதல்வரும் சென்னைப் பல்கலைக்கழக ஆட்சி மன்றக் குழு உறுப்பினருமான முனைவர் சு. இராமநாதன் அவர்கள் நிகழ்விற்குத் தலைமை தாங்கினார்.

சுதந்திர தினத்தை முன்னிட்டுக் கல்லூரியில் நடைபெற்ற பேச்சு மற்றும் கவிதை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டது. தொடர்ச்சியாகத் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் வேளச்சேரி இரயில் நிலையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்கள் குப்பைகளை அகற்றித் தூய்மைப்படுத்தி மரக்கன்றுகளை நட்டனர்.

இந்நிகழ்வை ஆசான் நினைவு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப் பணித்திட்டத் திட்ட அலுவலர் முனைவர் பொன். ரமேஷ்குமார் இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.  



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment