//]]>

Tuesday, August 1, 2017

யாழ்ப்பாணத்தில் சிறப்புற இடம்பெற்ற பரதநாட்டிய அரங்கேற்றம் (Photos)




உரும்பிராய் கலைக்கோவில் அதிபர் கலாபூஷணம் பத்மினி செல்வேந்திரகுமாரின் புதல்வி ஆரணி செல்வேந்திரகுமாரின் நடன அரங்கேற்ற நிகழ்வு 30.07.2017 ஞாயிற்றுக்கிழமை கால 9.30 மணிக்கு யாழ்ப்பாணம் நீராவியடியில் அமைந்துள்ள இலங்கைவேந்தன் கலைக்கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.

கோப்பாய் ஆசிரிய கலாசாலை பிரதி அதிபர் செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் இ.விக்னேஸ்வரன் கலந்து கொண்டார். கௌரவ விருந்தினர்களாக நடனவாரிதி லீலாம்பிகை செல்வராஜா, கலாகீர்த்தி சாந்தினி சிவநேசன், நாட்டியக்கலைமணி யசோதரா விவேகானந்தன், கலாவித்தகர் வசந்தி குஞ்சிதபாதம் ஆகியோர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினர்களாக யாழ். இந்து மற்றும் கொக்குவில் இந்துக் கல்லூரிகளின் ஓய்வுநிலை அதிபர் அ.பஞ்சலிங்கம், உடுவில் மகளிர் கல்லூரியின் ஓய்வுநிலை அதிபர் ஷிராணி மில்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். 

நிகழ்வில் அணிசேர் கலைஞர்களாக நட்டுவாங்கம் - பத்மினி செல்வேந்திரகுமார், குரலிசை – தவநாதன் றொபேட், வயலின் - அ.ஜெயராமன், மிருதங்கம் - சி.துரைராஜா ஆகியோர் பங்கேற்றனர்.

கலைக்கோவில் நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட மூன்றாவது அரங்கேற்றம் இதுவெனத் தெரிவிக்கப்பட்டது. அரங்கேற்றம் கண்ட ஆரணி யாழ். பல்கலைக்கழக நடனத்துறையின் மூன்றாம் ஆண்டு மாணவி என்பது குறிப்பிடத்தக்கது. 

அரங்கேற்றத்தில் நடனத்துறையுடன் தொடர்புடைய மிகப்பலர் கலந்து கொண்டிருந்தமையைக் காணமுடிந்தது. 


படங்கள்: ஐ.சிவசாந்தன்















இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment