//]]>

Thursday, August 31, 2017

மகிந்த ராஜபக்சவை ஆட்சியிலிருந்து நீக்கியமை தமிழ்மக்களின் மிகப் பெரிய சாதனை!: யாழில் சிறிதுங்க ஜெயசூரிய புகழாரம் (Photo)


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை  கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது  ஆட்சியிலிருந்து அகற்றுவதற்கு  வடக்கு, கிழக்கு, மலையகத் தமிழ்மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து வாக்களித்தனர்.  மகிந்த ராஜபக்சவை ஆட்சியிலிருந்து நீக்கியமை தமிழ்மக்கள் செய்த மிகப் பெரிய சாதனை என ஐக்கிய சோஷலிசக் கட்சியின் பொதுச் செயலாளரும், சிரேஷ்ட அரசியல் வாதியுமான சிறிதுங்க ஜெயசூரிய புகழாரம் சூட்டியுள்ளார். 

யாழ்.ஊடக அமையத்தில் இன்று வியாழக்கிழமை(31) பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் பொதே அவர் மேற்கண்டவாறு புகழாரம் சூட்டியுள்ளார். 

அவர் அங்கு தொடர்ந்தும் தெரிவிக்கையில், 

யுத்தம் முடிவடைந்த பின்னர் சம்பந்தன், சுமந்திரன், மாவை சேனாதிராஜா போன்ற கூட்டமைப்பின் தலைமைப் பதவியிலுள்ளவர்கள் இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தில் பின்வாங்குகிறார்கள்.  ஜனாதிபதியின் கவனத்திற்கு பிரச்சினையை எடுத்துச் செல்லாவிடில் ஒருபோதும் தீர்வு காண முடியாது. கூட்டமைப்புத் தலைமை தனது தலைமைக்குக் கீழ் தமிழ்மக்களை ஒன்றுதிரட்ட முடியாத நிலையிலிருக்கிறது. 

தமிழ்மக்களின் பிரச்சினை தற்போது அநாதரவான நிலையிலுள்ளது.  மைத்திரி-ரணில் கூட்டரசாங்கத்தால் தமிழ்மக்களுக்கு கிடைத்த பலாபலன் தானென்ன ?

வடக்கு கிழக்கில் வாழும் தமிழ், முஸ்லீம் மக்களின் பிரச்சினைகளை வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் பகுதி பகுதியாக மத்திய அரசாங்கத்திற்குத் தொடர்ச்சியாக எடுத்துக் கூறி வருகிறார். அத்துடன் தமிழ்மக்களுக்கான பிரச்ச்சினைகள் தொடர்பான அழுத்தங்களையும் வழங்கி வருகிறார் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment