யாழ். மீசாலை பங்களா வீதிப் பகுதியில் வீடொன்றின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் 22 பவுண் தங்க நகைகளைத் திருடிச் சென்றுள்ளனர். இன்று திங்கட்கிழமை(04) பட்டப்பகல் வேளையில் இந்தத் துணிகரத் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
வீட்டில் யாருமில்லாத வேளையில் மீசாலைப் பகுதியிலுள்ள ஒருவரின் வீட்டுக் கதவினை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் அலுமாரியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 22 பவுண் தங்க நகைகளைக் கொள்ளையிட்டுச் சென்று ள்ளனர். இது தொடர்பில் வீட்டு உரிமையாளரால் சாவகச்சேரிப் பொலி ஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
முறைப்பாட்டின் அடிப்படையில் சாவகச்சேரிப் பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான பொலிஸார் திருட்டுச் சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு மோப்ப நாய்களுடன் விரைந்து சென்று துரித விசாரணைகளை மேற்கொண்டனர்.
திருட்டுப் போன வீட்டிற்கு அண்மித்த பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் மோட்டார் சைக்கிளொன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
இந்த மோட்டார்ச் சைக்கிள் திருட்டுச் சந்தேகநபர்களினுடையது எனத் தெரிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment