//]]>

Sunday, December 17, 2017

உள்ளுராட்சி சபைத் தேர்தலில் யாழின் 17 சபைகளும் எங்கள் வசம்: சொல்கிறார் டக்ளஸ் தேவானந்தா(Photo)


எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் யாழ். மாவட்டத்திலுள்ள 17 உள்ளுராட்சி சபைகளும் எங்கள் கட்டுப்பாட்டிற்குள் வரும் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின்(ஈ.பி.டி.பி) யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், கட்சியின் பொதுச் செயலாளருமான டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

யாழிலுள்ள ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்றுச் சனிக்கிழமை(16) இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனான விசேட கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

 இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பொதுமக்களுக்கும் எங்களுக்குமிடையில் எப்போதும் இடைவெளிகள் அதிகமாக இருந்ததில்லை. மக்கள் எங்கள் மீது குற்றஞ்சாட்டவுமில்லை. ஊடகங்களும் அரசியல்வாதிகளும் தான் எங்கள் மீது குற்றம் சாட்டுகின்றனர். எங்கள் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளார்கள். தாம் ஏமாற்றப்பட்டுள்ளதைத் தற்போது மக்கள் உணர ஆரம்பித்துள்ளனர்.

எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் மக்கள் வெல்வார்கள். மக்களுடைய வெற்றி தான் எங்களுடைய வெற்றி எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

1 comments:

Makkala? Maakkala periyavare?

Post a Comment