//]]>

Sunday, December 17, 2017

தென்னிலங்கை எதிர்பார்க்கும் மென்போக்கை வடக்கு முதல்வர் கடைபிடிக்காமைக்கு காரணம் வெளியானது!(Video,Photos)

நான் தென்னிலங்கையில் பிறந்து வாழ்ந்தவன்  ரீதியில் அவ்வாறான மென்போக்கை என்னால் ஏற்றுச் செயற்பட முடியும். ஆனால், எமது இனம் வெகுவிரைவில்  தென்னிலங்கையைச் சேர்ந்த சிங்களவர்களால் கபளீகரத்திற்கு உள்ளாகி விடும் என  வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தின் ஐந்தாவது ஆண்டை முன்னிட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை(17) முற்பகல்-10.30 மணி முதல் மேற்படி மையத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போது 'நீங்கள் கடும் போக்கு வாதி எனத் தென்னிலங்கையிலுள்ள சில  அரசியல் வாதிகள் தொடர்ச்சியான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள்' இது தொடர்பில் உங்கள் கருத்தென்ன? என சிரேஷ்ட ஊடகவியலாளரொருவர் கேள்வியெழுப்பியிருந்தார்.

குறித்த கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் இது தொடர்பாக மேலும் தெரிவித்ததாவது,

எமது இனத்தின் நிலைத்த வாழ்வா? அல்லது தென்னிலங்கை எதிர்பார்க்கும் மென்போக்கா முக்கியம் என்பதை எமது மக்களே தீர்மானிக்க வேண்டும். அவ்வாறான மென்போக்கு எனக்குப் பல தனிப்பட்ட நன்மைகளைத் தரும். ஏன்? மத்தியில் அமைச்சர் பதவியைக் கூடக் கொண்டு வந்து தரக் கூடும்.

அவ்வாறான நிலை ஏற்படும் போது எமது இனம் விலை போய்விடும். சத்திரசிகிச்சை அமோக வெற்றி. ஆனால், நோயாளி இறந்து விட்டார்  என்ற நிலை ஏற்படும் எனவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment