//]]>

Sunday, December 10, 2017

2018 ஆம் ஆண்டில் பாடசாலை நாட்கள் எத்தனை தெரியுமா?

எதிர்வரும்- 2018 ஆம் ஆண்டுக்கான பாடசாலைத் தவணை அட்டவணை கல்வி அமைச்சால் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய அரசாங்க, நோன்மதி மற்றும் சமய விடுமுறைகள் காரணமாக 197 நாட்கள் மாத்திரமே பாடசாலை நடைபெறுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சிங்கள மற்றும் தமிழ்ப் படசாலைகளுக்கான முதலாம் தவணை ஜனவரி முதல் ஏப்ரல் மாதம்- 06 ஆம் திகதி வரை, இரண்டாம் தவணை ஏப்ரல்- 23 முதல் ஆகஸ்ட்-03 ஆம் திகதி வரை, மூன்றாம் தவணை செப்டெம்பர்-05 முதல் டிசம்பர்-07 ஆம் திகதி வரை, 

முஸ்லீம் பாடசாலைகள் முதலாம் தவணை ஜனவரி-02 ஆம் திகதி முதல் ஏப்ரல்-11 ஆம் திகதி வரை, இரண்டாம் தவணை முதலாம் கட்டம் ஏப்ரல்-18 முதல் மேமாதம்-11 ஆம் திகதி வரை, இரண்டாம் கட்டம் யூன்-18 முதல் ஆகஸ்ட்-17 வரை, மூன்றாம் தவணை ஆகஸ்ட்-27 முதல் டிசம்பர்-07 ஆம் திகதி வரை எனக் கல்வியமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment