சமூக விஞ்ஞானப் படிப்பு வட்டத்தினரின் ஏற்பாட்டில் "இலங்கையின் புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையும் இனப்பிரச்சினைக்கான தீர்வும்" எனும் தலைப்பிலான விசேட கலந்துரையாடல் நேற்று வெள்ளிக்கிழமை(08) பிற்பகல்-04 மணி முதல் இல- 62, கே.கே.எஸ். வீதி, கொக்குவில் சந்தி எனும் முகவரியில் அமைந்துள்ள தேசிய கலை இலக்கியப் பேரவையின் கவிஞர் முருகையன் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
சிரேஸ்ட ஊடகவியலாளர் க. வேல்தஞ்சன் தலைமையில் இடம்பெற்ற இந்த விசேட கலந்துரையாடல் நிகழ்வில் யாழ். பல்கலைக்கழகச் சட்டத்துறை விரிவுரையாளர் சட்டத்தரணி திருமதி- கோசலை மதன் மற்றும் இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபையின் மனித வள மேம்பாடும் அபிவிருத்தியும் பிரிவுக்கான முன்னாள் பிரதிச் செயலாளரும், வடமாகாண சபையின் முன்னாள் பிரதிச் செயலாளருமான சி. கிருஸ்ணானந்தன் ஆகியோர் கருத்துரைகள் ஆற்றினர்.
கருத்துரைகளைத் தொடர்ந்து திறந்த கலந்துரையாடலும் இடம்பெற்றது.
இந்த விசேட கலந்துரையாடல் நிகழ்வில் சிரேஷ்ட சட்டத்தரணி சோ. தேவராஜா, புனர்வாழ்வு, புனரமைப்பு அகதிகள் விவகார அமைச்சின் ஓய்வு நிலைச் செயலாளர் அ. ஜெயரட்ணம், ஓய்வு நிலைப் பொறியியலாளர் எஸ். அன்ரனிராஜா, தாயகம் சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் க. தணிகாசலம், சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் முக்கிய செயற்பாட்டாளர் ச. தனுஜன், சமூக, விஞ்ஞான, கலை, இலக்கிய ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment