//]]>

Thursday, December 28, 2017

52 இந்திய மீனவர்கள் யாழ். நீதிமன்றங்களால் விடுதலை (Photos)


சட்டமா அதிபர் திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கமைய புதுவருடத்தினை முன்னிட்டு நல்லிணக்க அடிப்படையில்  52 இந்திய மீனவர்கள் இன்றைய தினம்(28) ஊர்காவற்துறை,பருத்தித்துறை நீதிமன்றங்களால் விடுவிக்கப்பட்டுள்ளனர். 

இதன் பிரகாரம் 44 மீனவர்கள் ஊர்காவற்துறை நீதிமன்றத்தினாலும், எட்டு மீனவர்கள் பருத்தித்துறை நீதிமன்றத்தினாலும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.. 

விடுதலையான மீனவர்கள் யாழ். நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுப் பின்னர் யாழ். இந்தியத் துணைத்தூதரக அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளனர். 

குறித்த மீனவர்கள் ஐகதாப்பட்டினம், காரைக்கால், புதுச்சேரி, இராமேஸ்வரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவார்கள். 

இலங்கைக்  கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.  


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment