சிவ விரதங்களில் முக்கியமான திருவெம்பாவை விரதம் கடந்த- 24 ஆம் திகதி ஆரம்பமாகித் தொடர்ந்தும் ஒன்பது தினங்கள் இந்துப் பெருமக்களால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் யாழ்.குடாநாட்டிலுள்ள சிவன், அம்மன் ஆலயங்களில் திருவெம்பாவை உற்சவம் சிறப்பாக இடம்பெற்று வருகிறது.
திருவெம்பாவை உற்சவம் அதிகாலை வேளையே இடம்பெறுவதே வழமையாகவுள்ள நிலையில் யாழ். வலிகாமம் தெற்கில் கிராமத்து அம்மன் ஆலயமொன்றில் திருவெம்பாவைப் பாடல் பாடுவதற்கு எவருமில்லாத காரணத்தால் ஆலயத்துக்கு அண்மையிலுள்ள வீட்டுக்குச் சென்ற நிர்வாகத்தினர் இளைஞரொருவரை நித்திரையால் எழுப்பிக் குளிக்க வைத்து ஆலயத்துக்கு அழைத்துச் சென்று திருவெம்பாவைப் பாடல் பாட வைத்துள்ள சம்பவம் இன்று வியாழக்கிழமை(28) பதிவாகியுள்ளது.
முன்னைய காலங்களில் கிராமப் புற ஆலயங்களில் இடம்பெறும் திருவெம்பாவை உற்சவங்களில் அதிகாலை எழுந்து நீராடி உற்சாகத்துடன் ஊர்ப் பொதுமக்கள் கலந்து கொள்கின்ற போதும் தற்போது அவ்வாறு கலந்து கொள்கின்ற போக்கு மிகவும் அருகிக் காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது. நவீன தொழில்நுட்ப வசதிகள் மற்றும் சினிமாவின் தாக்கம் ஆகியனவே ஆர்வம் குறைவதற்கான காரணமெனத் தெரிவிக்கப்படுகிறது.
2 comments:
திருவிழாக்களை வேடிக்கை விளையாட்டாகச் செய்து பணம் புரட்டவே ஆலய நிர்வாகங்கள் முயல்கின்ற வேளை இப்படியும் ஒரு நிர்வாகமா என்று அதிசயிக்கத் தோன்றுகியது.
முதுகெழும்பு இல்லாதவர்களுக்கு முகநூல் உதவியே...!
தாங்கள் மேல் குறிப்பிட்ட விடயத்திற்கு திருவம்பாவை பாடலை கன்னியர்கள் வீடு சென்று துயில் எழுப்பி பாட வைத்தது அன்றையகாலம். தற்காலத்தில் ஆண்களை எழுப்பி நீராட்டி திருவெம்பாவை பாடலை பாட வைப்பது நிர்வாகத்தின் உத்தியே ஆகும்.
Post a Comment