//]]>

Tuesday, December 12, 2017

பங்குனிக்குப் பின்னராம் மாகாண சபைத்தேர்தல்


எல்லை மீளமைப்பு செயற்பாடுகள் நிறைவடைந்த பின்னர்- அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குப் பின்னர் மாகாணசபைத் தேர்தல்களை நடத்த முடியும் என்று சட்டமா அதிபர் உச்சநீதிமன்றத்தில் நேற்று தெரிவித்துள்ளார்.

 மாகாணசபைத் தேர்தல் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு எதிராக முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் உள்ளிட்ட ஏழு பேர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பான விசாரணை நேற்று உச்சநீதிமன்றத்தில் இடம்பெற்றது.

 இதன்போது, சட்டமா அதிபர் தரப்பில் முன்னிலையான மேலதிக சொலிசிற்றர் ஜெனரல் இந்திக தேமுனி டி சில்வா, இதனைத் தெரிவித்துள்ளார்.

 மாகாணசபை தேர்தல் தொகுதிகளின் எல்லை மீளமைப்பு பணிகள் வரும் ஜனவரி மாதம் நிறைவடைந்து விடும் என்றும், மார்ச் மாதத்துக்குப் பின்னர் மாகாணசபைத் தேர்தல்களை நடத்த முடியும் என்றும் அவர் உச்சநீதிமன்றத்தில் கூறினார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment