இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் யாழ். உடுவில் பிரதேச திருவாசகப் பெருவிழா நேற்றுத் திங்கட்கிழமை(11) முற்பகல் முதல் யாழ். மருதனார்மடம் ஸ்ரீ சுந்தர ஆஞ்சநேயர் ஆலய மணி மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி- தர்ப்பணா சுதர்சன் தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவில் முதுபெரும் சைவப்புலவர் சு.செல்லத்துரை பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.
குறித்த விழாவில் யாழ். சின்மயா மிஷன் தலைவர் ஜாக்கிரத சைதன்யா சுவாமிகள் திருமுன்னிலை வகித்தார்
இந்த விழாவில் அறநெறிப் பாடசாலை மாணவ, மாணவிகளின் கல்வி வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றிய மூத்த அறநெறி ஆசிரியர்கள் ஐந்து பேர் விசேடமாக 'அறநெறிச் சுடர்' எனும் விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்டனர்.
சிவதொண்டன் நா. முருகையா, சைவப்புலவர் என். பி. ஸ்ரீந்திரன், திருமதி- க. வைகுந்தம், திருமதி- க. அப்பாத்துரை, திருமதி- சோ. சிவசக்தி ஆகிய முத்த அறநெறி ஆசிரியர்களே இவ்வாறு கெளரவிக்கப்பட்டவர்களாவார்.
மேலும், ஆறு அறநெறிச் செயற்பாட்டாளர்களும் 'அறநெறிச் சுடர்' எனும் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.
குப்பிளான் கன்னிமார் கெளரி அம்பாள் அறநெறிப் பாடசாலை ஸ்தாபகரும்,
குப்பிளான் தெற்குப் பகுதியின் முன்னாள் கிராம சேவையாளருமான சோ. பரமநாதன், மற்றும் திருமதி- மு.இந்திராணி, திருமதி- உ. காஞ்சனாமாலா, பா. தபோதரன், சி. சிவகுமாரன், செல்வி- இ. நர்மதா ஆகிய அறநெறிச் செயற்பாட்டாளர்களே இவ்வாறு கெளரவிக்கப்பட்டவர்களாவார்.
விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்ட மூத்த அறநெறி ஆசிரியர்கள் மற்றும் அறநெறிச் செயற்பாட்டாளர்களுக்கு 'Jaffna Vision' இணையத்தளச் செய்திச் சேவையின் சார்பாக எமது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதுடன், நோய் நொடியின்றி இன்னும் பல்லாண்டு காலம் வாழ்ந்து அறநெறிப் பணிகள் சிறக்கவும் மனமுவந்து வாழ்த்துகின்றோம்.
0 comments:
Post a Comment