//]]>

Friday, December 15, 2017

யாழில் விலாசம் கேட்டு வந்தவர்கள் செய்த மோசமான காரியம்

யாழ். பண்டத்தரிப்பு அம்மன் வீதியிலுள்ள வீடொன்றுக்கு விலாசம் கேட்பது போன்று பாசாங்கு செய்த சென்ற இரு நபர்கள் அங்கு தனிமையிலிருந்த 86 வயதான மூதாட்டியொருவரின் பெறுமதியான தங்கச் சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பியோடியுள்ளனர்.

இச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை(14) மதியவேளையில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாகத் தங்கச் சங்கிலியைப் பறி கொடுத்த மூதாட்டியால் இளவாலைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த மூதாட்டியின் இரண்டரைப் பவுண் தங்கச் சங்கிலியே இவ்வாறு கொள்ளையிட்டுச் செல்லப்பட்டுள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment