//]]>

Thursday, December 14, 2017

அறநெறி அரசியான இந்துகலாசார உத்தியோகத்தர்(Photos)

யாழ்.உடுவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியில் அறநெறிக் கல்வி வளர்ச்சிக்கும், சமய வளர்ச்சிக்கும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வரும் இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி- தர்ப்பணா சுதர்சன் "அறநெறி அரசி" எனும் விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்டுள்ளார்.

இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் யாழ். உடுவில் பிரதேச திருவாசகப் பெருவிழா திங்கட்கிழமை(11-12.2017) முற்பகல் யாழ். மருதனார்மடம் ஸ்ரீ சுந்தர ஆஞ்சநேயர் ஆலய மணி மண்டபத்தில் இடம்பெற்ற போதே  மேற்படி கெளரவம் வழங்கப்பட்டுள்ளது.

சிறப்பு  விருந்தினராக்க் கலந்து கொண்ட ஓய்வு நிலை ஆசிரிய ஆலோசகர் கலாபூசணம் திருமதி- ஞானகுமாரி சிவனேசன் திருமதி- தர்ப்பணா சுதர்சனுக்குப் பொன்னாடை அணிவித்துக் கெளரவித்ததுடன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட சைவப்புலவர் சு.செல்லத்துரை "அறநெறி அரசி" எனும் விருது சூட்டிக் கெளரவித்தார்.

இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தரின் பணி சிறக்க எமது செய்திச் சேவை சார்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment