திருமறைக் கலாமன்றத்தின் 52ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நாளை ஞாயிற்றுக்கிழமை(03) பல்வேறு நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.
காலை- 07 மணிக்கு இல- 17,மார்ட்டின் வீதியில் அமைந்துள்ள கலைஞான சுரபி தியான இல்லத்தில் சிறப்பு வழிபாடு இடம்பெறும்.
தொடர்ந்து மாலை 5.00 மணிக்கு கலைத்தூது கலையகத்தில் கலைநிகழ்வுகளும் நூல் வெளியீடும் இடம்பெறும். இந்நிகழ்வுக்குப் பிரதமவிருந்தி னராக பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா கலந்து சிறப்பிப்பார்.
நிகழ்வில் கலைத்தூது அழகியல் கல்லூரி மாணவர்கள் வழங்கும் நடனமும் அதனைத்தொடர்ந்து கடந்த ஆண்டு திருமறைக் கலாமன்றக் கலைஞர்கள் மேற்கொண்ட கனடாவுக்கான கலைப்பாலத்தின் அனுபவப் பதிவுகளைத் தாங்கிய நூல் வெளியீடு இடம்பெறும் நூலுக்கான அறிமுகவுரையை கிளிநொச்சி மகா வித்தியாலய ஆசிரியர் ந.குகபரன் நிகத்துவார்.
நிறைவு நிகழ்வாக திருமறைக் கலாமன்றக் கலைஞர்கள் வழங்கும் 'யாழ்பாணன்' இசைநாடகம் இடம்பெறும்.
0 comments:
Post a Comment