சமூக விஞ்ஞானப் படிப்பு வட்டத்தினரின் ஏற்பாட்டில் "இலங்கையின் புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையும் இனப்பிரச்சினைக்கான தீர்வும்" எனும் தலைப்பிலான விசேட கலந்துரையாடல் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை(08) இல- 62, கே.கே.எஸ். வீதி, கொக்குவில் சந்தி எனும் முகவரியில் அமைந்துள்ள தேசிய கலை இலக்கியப் பேரவையின் கவிஞர் முருகையன் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.
சிரேஸ்ட ஊடகவியலாளர் க. வேல்தஞ்சன் தலைமையில் பிற்பகல்-04 மணியளவில் ஆரம்பமாகவுள்ள இந்த விசேட கலந்துரையாடல் நிகழ்வில் யாழ். பல்கலைக்கழகச் சட்டத்துறை விரிவுரையாளர் சட்டத்தரணி திருமதி- கோசலை மதன் மற்றும் இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபையின் மனித வள மேம்பாடும் அபிவிருத்தியும் பிரிவுக்கான முன்னாள் பிரதிச் செயலாளர் சி. கிருஸ்ணானந்தன் ஆகியோர் கருத்துரைகள் நிகழ்த்தவுள்ளனர்.
கருத்துரைகளைத் தொடர்ந்து திறந்த கலந்துரையாடலும் நடைபெறும்.
இந்தக் கலந்துரையாடல் நிகழ்வில் சமூக, விஞ்ஞான, கலை, இலக்கிய ஆர்வலர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு சமூக விஞ்ஞானப் படிப்பு வட்டத்தினர் கேட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment