//]]>

Tuesday, December 12, 2017

முல்லைத்தீவு, அம்பாறையில் கட்டுப் பணம் செலுத்தியது தமிழ்க் காங்கிரஸ்(Photo)

அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் சார்பில் முல்லைத்தீவு மாவட்டத்தின் நான்கு பிரதேச சபைகளுக்கும், அம்பாறை மாவட்டத்திலுள்ள திருக்கோவில், ஆலையடிவேம்பு, பொத்துவில், கல்முனை, நாவிதன்வெளி, காரைதீவு ஆகிய ஆறு பிரதேச சபைகளுக்குமான கட்டுப்பணம்  செலுத்தப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் பிரதேச சபைகளுக்கான கட்டுப்பணம் கட்சியின் முல்லை மாவட்ட முகவர் திலகநாதன் கிந்துஜன் ஊடாக  முல்லைத்தீவு மாவட்டத் தேர்தல் அலுவலகத்தில் திங்கட்கிழமை(11) செலுத்தப்பட்டது. 

கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் இந்நிகழ்வில் உடனிருந்தனர். 

இதேவேளை, அம்பாறை மாவட்டத்திலுள்ள பிரதேச சபைகளுக்கான கட்டுப்பணம் கட்சியின் செயலாளர் செ.கஜேந்திரன் மற்றும் மு.வரதராஜா ஆகியோரினால் நேற்று நண்பகல் அம்பாறை மாவட்டத் தேர்தல் அலுவலகத்தில் செலுத்தப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment