மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் உடுப்பிட்டி மகளிர் கல்லூரியின் பழைய மாணவர்களின் நிதிப் பங்களிப்பில் உருவாகிய கிறிஸ்தவ மாணவர்களுக்கான பிரார்த்தனை மண்டபம் இன்று செவ்வாய்க்கிழமை(05) சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ். உடுப்பிட்டி மகளிர் கல்லூரியில் இன்று முற்பகல் குறித்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
மேற்படி கல்லூரி அதிபர் திருமதி ஜி.சேதுராஜா தலைமையில் இடம்பெற்ற நிகழ்வு இலங்கையின் தேசியக் கொடி ஏற்றலுடன் ஆரம்பமாகியது.
இதன் பின்னர் பாண்ட் வாத்தியங்களுடன் அழைத்துவரப்பட்ட விருந்தினர்களாகக் கலந்து கொண்ட சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளரும், வட மாகாணசபை உறுப்பினருமான அகிலதாஸ் சிவக்கொழுந்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், எஸ்.சுகிர்தன், கே.தர்மலிங்கம் மற்றும் சிவன் அறக்கட்டளை நிதியத்தின் பணிப்பாளர் வி.கணேஸ்வரன் உள்ளிட்டோர் இணைந்து கூட்டாகப் புதிய கட்டடத்தினை திறந்து வைத்தனர்.
இதேவேளை, சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளரும், வட மாகாணசபை உறுப்பினருமான அகிலதாஸ் சிவக்கொழுந்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், எஸ்.சுகிர்தன், கே.தர்மலிங்கம் மற்றும் சிவன் அறக்கட்டளை நிதியத்தின் பணிப்பாளர் வி.கணேஸ்வரன் உள்ளிட்டோர் குறித்த பிரார்த்தனை மண்டபத்துக்கான நிதிப்பங்களிப்பினை வழங்கியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment