தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கத்துவம் வகித்து வந்த நான்கு கட்சிகளில் ஏற்கனவே ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி வெளியேறியுள்ள நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான ரெலோ கட்சியும் கூட்டமைப்பிலிருந்து வெளியேறுவதெனத் தீர்மானித்துள்ளது. இதன் அடிப்படையில் எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதில்லை எனவும் ரெலோ முடிவெடுத்துள்ளது.
நேற்றுச் செவ்வாய்க்கிழமை(05-12.2017) இரவு முதல் இன்று அதிகாலை வரை வவுனியாவில் இடம்பெற்ற மேற்படி கட்சியின் தலைமைத்துவக் குழுக் கூட்டத்தின் போது இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இதனால், தமிழர் அரசியலில் மீண்டுமொரு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment