அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் யாழ் மாவட்டத்தில் போட்டியிடும் ஏழு சபைகளுக்கான வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.
இன்று புதன்கிழமை(20) பிற்பகல்-02 மணியளவில்
குறித்த வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
யாழ். வ லிகாமம் தெற்குப் பிரதேச சபை, வலிகாமம் மேற்குப் பிரதேச சபை, சாவகச்சேரிப் பிரதேச சபை, வடமராட்சி தென்மேற்குப் பிரதேச சபை, பருத்தித்துறைப் பிரதேச சபை, பருத்தித்துறை நகரசபை, வல்வெட்டித்துறை நகரசபை ஆகிய சபைகளுக்காக கட்சியின் தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணன் வேட்பாளர்களுடன் சென்று யாழ்.மாவட்டச் செயலகத்திலுள்ள தேர்தல்கள் அலுவலகத்தில் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment