யாழ். போதனா வைத்தியசாலையில் முதல்தடவையாக இதய மாற்றுச் சத்திர சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயதுடைய நபரொருவருக்கே நேற்றைய தினம்(20) இந்தச் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த நபர் தற்போது ஆரோக்கியத்துடன் உள்ளதாக வைத்தியசாலைத் தரப்புத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
வைத்தியகலாநிதி- எம்.எஸ். முகுந்தன் தலைமையிலான விசேட வைத்திய நிபுணர் குழுவினரால் குறித்த சாத்திரசிகிச்சை வெற்றிகரமாக நடாத்தி முடிக்கப்பட்டுள்ளது.
திறந்த இதயசத்திரச் சிகிச்சையை வெற்றிகரமாக நிறைவேற்றிய விசேட வைத்தியநிபுணர் குழுவினருக்கு மத்திய சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளதுடன் மேலும் பல்வேறு தரப்பினரிடம் வாழ்த்துக்கள் வந்து குவிந்த வண்ணமுள்ளது.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வைத்தியச் சாதனையை நிலைநாட்டிய வைத்திய நிபுணர் குழுவினருக்கு எமது இணையத் தளச் செய்திச் சேவை சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் பெரு மகிழ்ச்சியடைகிறோம்.
0 comments:
Post a Comment