//]]>

Thursday, December 21, 2017

இலங்கை அரசாங்கத்திற்குப் பேரிடி கொடுக்கும் புலம்பெயர் தமிழர்கள்(Photos)

பிரித்தானியத் தமிழர் தகவல் நடுவத்தின் ஏற்பாட்டில் இலங்கை அரசிற்குப் பிரித்தானியா ஆயுதங்களை விற்பனை செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும் எனும் கோரிக்கையினை முன்வைத்துப்  பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் விசேட சந்திப்புகள் இடம்பெற்று வருகின்றன.

அந்த வகையில் நேற்று முன்தினம்(19) கார்த்தீபன் யோகமனோகரன் தலைமையில் தங்கவேல் வாகீசன் , விஜயராசா பிரதீப், செல்வக்குமரன் சிவானந்தம், திலக் அன்ரூஸ் ஆகியோர் மிச்சம் மற்றும் மோர்டன் நாடாளுமன்ற உறுப்பினர் ஷியோபன் மக்டொனாளைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தனர்.

இந்தச் சந்திப்பின் போது தமிழ் இனப்படுகொலை மேற்கொண்ட சிங்களப் பேரினவாத அரசு தமிழ் மக்களுக்கு இழைத்து வரும் துன்பங்கள் பல ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ள இவ்வேளையில் மனித நேயத்திற்கு மதிப்பளிக்கும் பிரித்தானியா இலங்கைக்கு ஆயுதங்களைத் தொடர்ந்து விற்பனை செய்வது ஏற்புடையதல்ல எனச் சுட்டிக்காட்டியதுடன் உடனடியாக இந்த ஆயுத விற்பனையை நிறுத்த வேண்டும்  எனவும் கோரிக்கை விடுத்தனர்.

மேலும் சிங்கள அரசு தமிழர் பிரதேசங்களில் காணப்படும் தமிழர்களின் வரலாற்றுச் சின்னங்களை அழித்து அப்பிரதேசங்களைச் சிங்கள மயப்படுத்தி வருகின்றமையும் இச்சந்திப்பின் போது சுட்டிக்காட்டப்பட்டது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment