வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளின் முக்கிய கலந்துரையாடலொன்று யாழ். பொது நூலகத்திற்கு அருகேயுள்ள முனியப்பர் ஆலயம் முன்பாக இன்று வியாழக்கிழமை(21) முற்பகல் இடம்பெற்றது.
இந்தக் கலந்துரையாடலின் போது பயிற்சி அடிப்படையிலான அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனங்களைப் பெற்றுக்கொள்வது தொடர்பாகத் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
கடந்த-17 ஆம் திகதி வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூக நிர்வாக உறுப்பினர்களுக்கிடையே யாழ்ப்பாணத்தில் கலந்துரையாடலொன்று நடாத்தப்பட்டது. இந்தக் கலந்துரையாடலில் அரச நியமனங்களைப் பெறுவது தொடர்பான முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. இதற்கமைய இன்று வியாழக்கிழமை முக்கிய கலந்துரையாடல் நடாத்தப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment