அகில இலங்கை தமிழ்க் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரின் யாழ். மாவட்டத்தில் போட்டியிடும் அனைத்து சபைகளின் வேட்பு மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்கொள்ளும் இறுதித் தினம் இன்று வியாழக்கிழமை(21)நண்பகல்- 12 மணியுடன் நிறைவடைந்துள்ள நிலையில் வேட்புமனுக்கள் ஆராயப்பட்டு யாழ். மாவட்டத் தெரிவத்தாட்சி அலுவலரினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மற்றும் நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள் தொடர்பான விபரங்கள் அறிவிக்கப்பட்டன.
இதன்போதே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அனைத்து வேட்புமனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
யாழ். மாவட்டத்தில் கடந்தவாரம் சாவகச்சேரி நகரசபைக்கான வேட்புமனு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியால் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் குறித்த வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது.
இந்நிலையில் யாழ். மாவட்டத்தில் நேற்றைய தினம் ஆறு சபைகளுக்கும் இன்றைய தினம் பத்து சபைகளுக்கும் வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment