யாழ். குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இன்று திங்கட்கிழமை(25) நத்தார் பண்டிகை களைகட்டியுள்ளது.
நத்தார் பண்டிகையையொட்டி இயேசுபிரானின் பிறப்பைக் குறிக்கும் வகையில் நள்ளிரவுப் பிரார்த்தனையும் கூட்டுத்திருப்பலி நிகழ்வும் நேற்று நள்ளிரவு யாழ். மரியன்னை ஆலயத்தில் யாழ். மறை மாவட்ட ஆயர் யஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் இடம்பெற்றது.
இதன் போது இயேசு பாலன் பிறப்பையொட்டிய கூட்டுத் திருப்பலி, நற்கருணை கீதங்கள், நற்சிந்தனை என்பன நடைபெற்றன.
இந்த நிகழ்வில் பெருந்திரளான கிறிஸ்தவ மக்கள் கலந்துகொண்டனர்.
இதேபோன்று, யாழ்.. குடாநாட்டிலுள்ள அனைத்துத் தேவாலயங்களிலும் நத்தார் பண்டிகையை முன்னிட்டு கூட்டுத் திருப்பலி மற்றும் பிரார்த்தனை நிகழ்வுகள் சிறப்புற இடம்பெற்று வருகின்றன. இந்நிகழ்வுகளில் பெருமளவான மக்கள் கலந்து கொண்டிருப்பதை அவதானிக்க முடிகிறது.
அத்துடன் தமது உறவினர்கள், நண்பர்களுக்கு நத்தார்தின வாழ்த்துக்கள் கூறி மகிழ்வதுடன் தீஞ்சுவைப் பண்டங்கள் பரிமாறி மகிழ்வதையும் காண முடிகிறது.
இதேவேளை, நத்தார் பண்டிகையையொட்டி குடாநாட்டிலுள்ள தேவாலயங்களின் சூழல் மற்றும் கிறிஸ்தவ மக்களின்
வீட்டுச் சூழல்கள் விழாக்கோலம் பூண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment