//]]>

Sunday, December 10, 2017

உள்ளுராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் ஈரோஸ் ஜனநாயக முன்னணி எடுத்துள்ள முடிவு (Videos)

ஈரோஸ் ஜனநாயக முன்னணி எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் உதயமாகியுள்ள புதிய கூட்டமைப்புடன் இணைந்து எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் வட- கிழக்கில் போட்டியிடவுள்ளதாக அக் கட்சியின் பொதுச் செயலாளர் எஸ். இராஜேந்திரன் உத்தியோகபூர்வமாகத் தெரிவித்துள்ளார். 

யாழ்.ஊடக அமையத்தில் இன்று(10) நண்பகல்-12 முதல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். 

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ்  பிரேமச்சந்திரனும் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு ஈரோஸ் ஜனநாயக முன்னணி தம்முடன் இணைந்து செயற்பட முன்வந்திருப்பதாகத் தெரிவித்தார். 

மேலதிக விபரங்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள காணொளி(வீடியோ) இணைப்பில் காணலாம்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment