சிலரை ஓய்ந்திருக்க விட்டமையால் பல்வேறு தீங்குகள் எமது மக்களுக்கு ஏற்பட்டுள்ளன என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பிறந்த தின நினைவு நிகழ்வு இன்று திங்கட்கிழமை(11) பிற்பகல் யாழ். நல்லூர் துர்க்காதேவி மணி மண்டபத்தில் இடம்பெற்று வருகிறது.
குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
ஓடி விளையாடு பாப்பா...என மகாகவி பாரதியார் பாடியுள்ள பாடல் சிறுவர்களுக்கு மாத்திரம் உரியதல்ல. இந்தப் பாடல் இளைஞர்களுக்கும், வயது வந்தவர்களுக்கும் கூடப் பொருந்தும்.
குறித்த பாடலில் நீ ஓய்ந்திருக்கலாகாது....என அவர் கூறியுள்ள கூற்றின் தாற்பரியம் அண்மைக் காலங்களில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இவற்றால் எமது மக்கள் அச்சத்துக்குள்ளாகியுள்ளார்கள். ஆனால், அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பதில்லையே....என்ற பாடலில் அச்சம் கொள்ள வேண்டாம் என மகாகவி பாரதியார் அன்றே கூறியுள்ளார் எனவும் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment