புதுவருடத்தை முன்னிட்டு யாழ். ஏழாலை சகோதர இளைஞர்கள் அமைப்பின் ஏற்பாட்டில்
வருடாந்த மாபெரும் இரத்ததான நிகழ்வு நாளை திங்கட்கிழமை(01) யாழ். ஏழாலை புனித இசிதோர் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள புனித ஞானப்பிரகாசியார் அறிவாலயத்தில் இடம்பெறவுள்ளது.
நாளை காலை-08 மணி முதல் நடைபெறவுள்ள இந்த இரத்ததான முகாமில் ஏழாலை பிரதேச இளைஞர்- யுவதிகள், நலன் விரும்பிகள் மற்றும் அயற்பிரதேசங்களைச் சேர்ந்த இளைஞர்- யுவதிகள், நலன் விரும்பிகள் அனைவரும் கலந்து கொண்டு உயிர் காக்கும் உன்னத பணிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஏழாலை சகோதர இளைஞர்கள் அமைப்பு சார்பாக அமைப்பின் செயலாளர் ஹிமால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் எமது செய்திச் சேவைக்கு மேலும் தெரிவித்ததாவது,
தற்போது யாழ். வைத்தியசாலைகளில் இரத்தத்தின் தேவை அதிகரித்துக் காணப்படும் நிலையில் இரத்ததானம் வழங்க அனைவரும் முன்வர வேண்டுமென்றார்.
முற்றுமுழுதாக இளைஞர்களின் முயற்சியினால் முன்னுதாரணமான வகையில் மேற்கொள்ளப்படும் குறித்த இரத்ததான நிகழ்வு சிறக்க நாமும் கைகொடுப்போம்.
(செய்தித் தொகுப்பு மற்றும் காணொளி:- செல்வநாயகம் ரவிசாந்-)
0 comments:
Post a Comment