யாழ்ப்பாணப் பிரதேச கலாசார அதிகார சபையின் ஏற்பாட்டில் 'அழகிய குடும்பம்' எனும் கலைப்படைப்பாளிகளின் குடும்பங்களுக்கான சிறப்பு நிகழ்வு இன்று வியாழக்கிழமை(14) யாழ்ப்பாணப் பிரதேச செயலக மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
இந்நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூதாய மருத்துவத் துறையைச் சேர்ந்த வைத்திய கலாநிதி திருமதி- திருமகள் சிவசங்கர் மற்றும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் உளவளத் துணையாளர் நா. நவராஜ் ஆகியோர் வளவாளர்களாகக் கலந்து கொண்டு கருத்துரைகள் ஆற்றினர். அதனைத் தொடர்ந்து சிரேஷ்ட கலைஞர்கள் பங்குபற்றிய கிராமிய இசைநிகழ்வும் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் யாழ்ப்பாணப் பிரதேச செயலகத்திற்குட்பட்ட 70 வரையான தெரிவு செய்யப்பட்ட சிரேஷ்ட கலைஞர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
குறித்த நிகழ்வு யாழ். பிரதேச செயலகத்திற்குட்பட்ட சிரேஷ்ட கலைஞர்களை உள்வாங்கி முதன்முறையாக நடாத்தப்படுவதாக யாழ்ப்பாணப் பிரதேச கலாசார அதிகார சபையின் ஒருங்கிணைப்பாளர் ப. தமிழ்மாறன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் எமது செய்திச் சேவைக்குப் பிரத்தியேகமாகத் தெரிவித்த கருதுக்களைக் கீழுள்ள காணொளி இணைப்பில் காணலாம்.
0 comments:
Post a Comment