ஜனாதிபதி ஆணைக் குழுக்களின் அறிக்கைகள் தொடர்பான பாராளுமன்ற விவாதம் எதிர்வரும் பெப்ரவரி மாதம்-06 ஆம் திகதி இடம்பெறுமென சிறிலங்கா பாராளுமன்றப் பிரதிச் செயலாளர் தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சபாநாயகர் கரு ஜெயசூரியவுக்கு விடுத்த வேண்டுகோளின் அடிப்படையிலேயே பாராளுமன்றம் கூட்டப்படவுள்ளது.
மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி மற்றும் முன்னைய ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற பாரிய மோசடிகள், ஊழல்கள், அதிகார மீறல்கள் தொடர்பில் விசாரித்த அதிபர் ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் தொடர்பில் விவாதிக்கவே சிறப்புப் பாராளுமன்றக் கூட்டத்தொடருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment