இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கடந்த வருடம் டிசம்பர் மாத இறுதி வரை மத்திய திறைசேரியினால் 5399.20 மில்லியன் ரூபா மாத்திரமே விடுவிக்கப்பட்டுள்ளது. இது மொத்த நிதி ஒதுக்கீட்டின் 90 சத வீதமாகும்.
அத்துடன், கிடைக்கப்பெற்ற நிதி அமைச்சுக்கள் – திணைக்களங்களினூடாக நூறு வீதம் முழுமையாகச் செலவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஒதுக்கீட்டில் அனுமதிக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் 97 சதவிகிதம் முன்னேற்றம் கண்டுள்ளது.
மேலும், பாடசாலைக் கல்வியை ஒரு அறிவு மையத்தின் அடிப்படையாக மாற்றும் செயற்றிட்டத்திற்காகவும், சுகாதாரத்துறை அபிவிருத்தித் திட்டங்களுக்காகவும் கடந்தாண்டு 675 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்தது.
இதில், 2017 டிசம்பர் வரை 612 மில்லியன் ரூபாவே மத்திய திறைசேரியினால் விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த நிதி முழுமையாக செலவு செய்யப்பட்டு 97வீதமான முன்னேற்றம் அடையப் பெற்றுள்ளது.
இந்த மொத்த ஒதுக்கீட்டில் 63 மில்லியன் ரூபா மத்திய திறைசேரியினால் இன்னமும் விடுவிக்கப்பட வேண்டியுள்ளது.
தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் கீழ் 207.11 மில்லியன் ரூபா கடந்தாண்டு ஒதுக்கப்பட்டது.இதில், 64 வீதமான நிதி மாத்திரமே விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், 75.16 மில்லியன் ரூபா விடுவிக்கப்பட வேண்டும்.
இதேவேளை, கொடுத்த பணத்தை செலவழிக்கவில்லை என குற்றஞ்சாட்டுபவர்களுக்குப் பதிலளித்துள்ள முதலமைச்சர் உறுதியளித்தவாறு அரசாங்கம் மொத்தப் பணத்தையும் வழங்காதிருப்பதாகத் தெரிவித்துள்ளதுடன் ஆகவே, ஏன் இந்தப் பணம் வழங்கப்படவில்லை என்பதை இவ்வாறானவர்கள் அரசாங்கத்திடம் கேட்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கடந்த 2016 ஆம் ஆண்டிற்கான நிதியில் 1050 மில்லியன் ரூபா 2017ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் வழங்கப்பட்டுள்ளதாகவும் வடக்கு முதலமைச்சர் தனது அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளார்.
0 comments:
Post a Comment