ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறைகளை நடத்தியவர்களுக்கெதிராக நீதி பயன்படுத்தப்படுமென நாங்கள் உறுதியளிப்பதோடு, அந்த நோக்கத்திற்காக அரசு அர்ப்பணிப்புடன் செயற்படும் எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மஹிந்த ராஜபக்ஷவின் இருண்ட ஆட்சிக் காலத்தில் செய்யப்பட்ட கொலைகளுக்கு எதிராக நீதியை நிலைநாட்ட நல்லாட்சி அரசு இன்றுவரை அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு வருகிறது.
இப்போதைக்கு லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டு ஒன்பது வருடங்களும், நல்லாட்சி அரசு ஆட்சிக்கு வந்து மூன்று வருடங்களும் கடந்து விட்டன. ராஜபக்ஷவின் இருண்ட ஆட்சிக் காலத்தில் செய்யப்பட்ட கொலைகளுக்கு எதிராக நீதியை நிலைநாட்ட நல்லாட்சி அரசு இன்றுவரை அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு வருகிறது.
ஊழல் நிறைந்த அரசுக்கெதிராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், நானும் கடந்த 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம்- 21ஆம் திகதி நல்லாட்சிக்கான அரசியல் போராட்டத்தில் கைகோர்த்தோம். நாங்கள் நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்த வேண்டுமானால் 2015 ஆம் ஆண்டு ஜனவரி எட்டாம் திகதி எமக்கு வாக்களிக்குமாறு வேண்டியிருந்தோம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
0 comments:
Post a Comment