சின்மயா மிஷனின் ஏற்பாட்டில் "வாழ்க்கை வழிநுட்பங்கள்" எனும் தலைப்பிலான விசேட ஆன்மீக அருளுரை கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் நேற்று முன்தினம்(08) சிறப்பாக இடம்பெற்றது.
சின்மயா மிஷனின் உலகளாவிய தலைவர் முக்ய சுவாமி ஸ்வரூபானந்தாஜி தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் திருகோணமலை சின்மயா மிஷன் வதிவிட ஆச்சாரியார் பிரம்மச்சாரனி மகிமா சைதன்யா, கிளிநொச்சி சின்மயா மிஷன் வதிவிட ஆச்சாரியார் பிரம்மச்சாரி சிவேந்திர சைதன்யா ஆகியோர் பிரதம விருந்தினராகவும், கரைச்சிப் பிரதேசசெயலர் த.முகுந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், வடமாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிபிள்ளை ஆகியோர் ஏனைய விருந்தினர்களாகவும் கலந்து சிறப்பித்தனர்.
எவ்வாறு மன நிம்மதியுடன் வாழலாம்? என ஸ்ரீமத் பகவத்கீதையிலிருந்து எடுத்துக் காட்டு மூலம் விளக்கப்பட்டதுடன் நாம் பிறருக்கு ஏதாவது உதவி செய்வதன் மூலம் நாமும் இன்புற்றுப் பிறரையும் இன்புறச் செய்யலாம் போன்ற மார்க்க முறைமையும் இதன் போது விளக்கமளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் துறவியர்கள், குருமார்கள், சமயப் பெரியார்கள், துறைசார்ந்தோர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
நன்றி-(படங்கள்:- ஐ.சிவசாந்தன்)
0 comments:
Post a Comment