மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு மற்றும் புனரமைப்பு வேலைகளுக்காக வடமாகாணத்தின் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா மாவட்டங்களின் சில பகுதிகளில் இன்று புதன்கிழமை(03) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இதன் படி, இன்று காலை-08.30 மணி முதல் மாலை-05 மணி வரை யாழ். மாவட்டத்தின் காரைநகர்ச் சிவன் கோவிலடி, பொன்னாலை கிருஷ்ணன் கோவிலடி, பொன்னாலை வீட்டுத் திட்டம், வலந்தலைச் சந்தி, சிவகாமி அம்மன் கோவிலடி, ஆலடி, மருதபுரம், வியாவில், கருங்காலி ஆகிய பகுதிகளிலும்,
இன்று காலை-09 மணி முதல் மாலை- 05 மணி வரை வவுனியா மாவட்டத்தின் அரசமறிப்புக் கிராமம் மற்றும் ராஜ் மீன்பிடிக் கூட்டுத் தாபனம் ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment