எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு நாளை- 22 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது.
இதன் பிரகாரம், நாளை- 22 ஆம் திகதி மாவட்டச் செயலக அதிகாரிகளும், எதிர்வரும்-25 ஆம் திகதி பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், அரச நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள் ஆகியோரும், 26 ஆம் திகதி பொலிஸாரும் தபால் மூலம் வாக்களிக்க முடியுமென தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இவ்வருடம் சுமார் 560,000 அரச உத்தியோகத்தர்கள் தபால் மூலம் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment