மின்சாரத் தொகுதி பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக நாளை ஞாயிற்றுக்கிழமை(21) வடக்கு மாகாணத்தில் யாழ்.மாவட்டத்தின் முக்கிய பகுதிகள் உள்ளிட்ட பல பகுதிகளிலும், இலங்கை மின்சார சபையின் சேவைக்குட்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தையும் உள்ளடக்கிய கிளிநொச்சிப் பிரதேசத்திலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, நாளை காலை-08.30 மணி முதல் மாலை-05.30 மணி வரை யாழ். மாவட்டத்தின் கந்தர்மடம், அன்னசத்திரத்துச் சந்தி, இலுப்பையடிச் சந்தி, திருநெல்வேலி பரமேஸ்வராச் சந்தி, சிவன் அம்மன் வீதி, தலங்காவில், பருத்தித்துறை வீதியில் நாக விகாரையிலிருந்து பாரதியார் சிலை வரை, விக்ரோறியா வீதி, மின்சார நிலைய வீதியில் ஒரு பகுதி, புகையிரத நிலையப் பிரதேசம், மார்ட்டின் வீதி, யாழ். 2 ஆம், 3 ஆம், 4 ஆம் குறுக்குத் தெருக்கள், ஸ்ரான்லி வீதியில் புகையிரதக் கடவையிலிருந்து இராசாவின் தோட்ட வீதி வரை, அம்பலவாணர் வீதி, அன்னசத்திர வீதி, ஆஸ்பத்திரி வீதியில் வேம்படிச் சந்தியிலிருந்து மார்ட்டீன் வீதி வரை, ஸ்ரான்லி வீதியில் ஆரியகுளத்திலிருந்து முட்டாசுக் கடைச் சந்தி வாராய், கஸ்தூரியார் வீதியில் ஒரு பகுதி, மணிக்கூட்டு வீதியில் ஒரு பகுதி, நொதேர்ண் சென்றல் கொஸ்பிற்றல், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆண்கள் விடுதி, பலாலி வீதி டம்றோ காட்சியறை, ஹற்றன் நஷனல் வங்கியின் பிராந்திய அலுவலகம், ஸ்ரான்லி வீதியிலுள்ள பீப்பிள் லீசிங் அன் பினான்ஸ் கம்பனி, AVNOR பிறைவேற் லிமிற்ரெட், ஸ்ரான்லி வீதியிலுள்ள மக்கள் வங்கி அலுவலகம், யாழ். புகையிரத நிலையம், சிறுநதியா நகை மாளிகை, Raja Talkies, LOLC, ஞானம்ஸ் விடுதி, ரொப்பாஸ் ஆகிய பகுதிகளிலும் ,
காலை-08.30 மணி முதல் மாலை- 06 மணி வரை இலங்கை மின்சார சபையின் சேவைக்குட்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தையும் உள்ளடக்கிய கிளிநொச்சிப் பிரதேசத்தில் ஆனையிறவு உப்பளம், ஆனையிறவு புகையிரத நிலையம், கள்ளப்பாடு, கள்ளப்பாடு மீன்பிடி சமாசம், சாந்தபுரம், இரணைமடு, திருவையாறு, தட்டுவன் தொட்டி, உமையாள்புரம், இயக்கச்சி VIR இராணுவ முகாம், இரணைமடு விசேட அதிரடிப்படை தலைமை இராணுவ முகாம் ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
(எஸ்.ரவி-)
0 comments:
Post a Comment