உள்ளூராட்சித் தேர்தலை மையப்படுத்திப் பொருட்கள் விநியோகித்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கண்டறியத் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் விசேட குழு அமர்த்தப்பட்டுக் கண்காணிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தலை மையப்படுத்தி நேரடியாகவோ, மறைமுகமாகவோ பொருட்களை விநியோகிப்பவர்களுக்கு எதிராக முறைப்பாடு கிடைக்கும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment