//]]>

Friday, January 19, 2018

வடக்கில் இன்று மின்தடை

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக வடமாகாணத்தில் யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, மன்னார் ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் இன்று வெள்ளிக்கிழமை(19) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார். 

இதன்படி, இன்று காலை- 08.30 மணி முதல் பிற்பகல்-05 மணி வரை யாழ். மாவட்டத்தின் வலந்தலைச் சந்தி, சிவகாமி அம்மன் கோவிலடி, ஆலடி, மருதபுரம், வியாவில், கருங்காலி, காரைநகர்ச் சிவன் கோவிலடி, பொன்னாலை கிருஷ்ணன் கோவிலடி, பொன்னாலை வீட்டுத் திட்டம் ஆகிய பகுதிகளிலும், 

காலை-08 மணி முதல் பிற்பகல்- 05.30 மணி வரை தெற்கிலுப்பைக்குளம், கோவில்குளம், ஆச்சிபுரம், சமணன் குளம், மகாமயிலங்குளம், மருதநகர், எல்லப்பமருதங்குளம், பெரியகூமரசங்குளம், ஆசிக்குளம், சிதம்பரபுரம், சாந்தசோலை கிராமம், கொக்கிளிய, அட்டம்பஸ்கட கிராமம், தவசிக்குளம் கிராமம், பண்டாரிக்குளம் கிராமம் ஆகிய பகுதிகளிலும், 

காலை - 08 மணி முதல் பிற்பகல்- 05 மணி வரை கிளிநொச்சி மாவட்டத்தின் பரந்தன், முரசுமோட்டை, தர்மபுரம், வகிசுவாமடு, தேராவில், நவஜீவனம் பாம், விசுவமடு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் ஆகிய பகுதிகளிலும், 

காலை- 08 மணி முதல் பிற்பகல்- 05.30 மணி வரை மன்னார் மாவட்டத்தின் தலைமன்னார் பிரதேசத்தின் ஒரு பகுதியிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.   

('தமிழின் தோழன்')

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment