//]]>

Friday, January 19, 2018

பயங்கரவாத சட்டத்தை உடன் நீக்க வலியுறுத்தியது ஐரோப்பிய ஒன்றியம்

பயங்கரவாத தடைச்சட்டத்தை உடனடியாக நீக்குவதற்கு இலங்கை அரசாங்கம் அவசர நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

கொழும்பில் நேற்று(18) ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இலங்கை அரசுக்குமிடையிலான 21 ஆவது கூட்டுக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் கருத்து வெளியிடும் போதே மேற்கண்ட வலியுறுத்தலை விடுத்துள்ளனர்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கும், அனைத்துலகத் தர நியமங்களுக்கேற்ற புதிய சட்டத்தைக்  கொண்டு வருவதற்கும் அவசர நடவடிக்கையை  அதிகாரிகள் எடுக்க வேண்டும் எனவும் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment