இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் இலவச யோகாசனக் கற்கை நெறியின் புதிய பிரிவு நாளை சனிக்கிழமை(19) காலை-06.30 மணியளவில் நல்லூர் நாவலர் மணிமண்டபத்தில் ஆரம்பமாகவுள்ளது.
இந்த இலவசக் கற்கை நெறி வாரம் தோறும் சனி, ஞாயிறு தினங்களில் காலை-06.30 மணி முதல் 07.30 மணி வரை ஆண்களுக்கும், காலை-07.30 மணி முதல் 08.30 மணி வரை பெண்களுக்கும் என இரு பிரிவுகளாக நடைபெறும்.
இந்த இலவசக் கற்கை நெறியில் கலந்து கொண்டு கற்கை நெறியைப் பூர்த்தி செய்யும் அனைவருக்கும் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் பெறுமதிவாய்ந்த சான்றிதழ்கள் வழங்கப்படும்.
இந்த இலவச யோகாசனக் கற்கை நெறிக்கு ஏற்கனவே பலரும் பதிவுகளை மேற்கொண்டுள்ள நிலையில் ஆர்வமுள்ளவர்கள் நாளை சனிக்கிழமையும் நல்லூர் நாவலர் மணிமண்டபத்தில் தமது பதிவுகளை மேற்கொள்ள முடியுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment