//]]>

Sunday, January 28, 2018

நாடாளாவிய ரீதியில் வேலைநிறுத்தம்!

சில கோரிக்கைகளை முன்வைத்து இந்த வாரம் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாடாளாவிய ரீதியில் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதற்குத் தீர்மானித்துள்ளது.

இதன்படி, நாளை மறுதினம்-30 ஆம் திகதி காலை-08 மணி முதல் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளரும், வைத்தியருமான் ஹரித அழுத்தே தெரிவித்துள்ளார்.

சைட்டத்திற்கெதிராக அரசாங்கம் எந்தவொரு தீர்வையும் பெற்றுக் கொடுக்காமை மற்றும் கோரிக்கைகளுக்கமைய சம்பள உயர்வு வழங்கப்படாமை ஆகியவற்றைக் கண்டித்தே இந்த வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment