மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக வடமாகாணத்தின் மன்னார் மற்றும் வவுனியாவின் சில பகுதிகளில் நாளை செவ்வாய்க்கிழமை(16) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.
நாளை காலை-08 மணி முதல் மாலை- 05.30 மணி வரை மன்னார் மாவட்டத்தின் பறயனாலங்குளத்திலிருந்து தலைமன்னார் வரை, வங்காலை கடற்படை முகாம், வங்காலை நீர்ப்பாசனத் திணைக்களம், அடம்பன் நீர்ப்பாசன சபை, கமலாம்பிகை அரிசி ஆலை, மாந்தை உப்பு உற்பத்தி நிலையம், மன்னார் கீரி ஐஸ் தொழிற்ச்சாலை, மன்னார் வைத்தியசாலை, மன்னார் தொலைத்தொடர்பு நிலையம், ஆவேமரியா ஐஸ் தொழிற்சாலை, ரைமேக்ஸ் கார்மெண்ட், விசேட அதிரடிப்படை முகாம், எருக்கலம்பிட்டி பம் கவுஸ், பேசாலை, வங்காலைப்பாடு ஐஸ் தொழிற்சாலை, பேசாலை ஐஸ் தொழிற்சாலை, மீன்பிடி சமாசம், அந்தோனிப்பிள்ளை ஐஸ் தொழிற்சாலை, கூல்மென் ஐஸ் தொழிற்சால, தலைமன்னார் வைத்தியசாலை, தலைமன்னார் கடற்படை முகாம், சீனத் துறைமுகம் ஆகிய பகுதிகளிலும்,
காலை-08 .30 மணி முதல் மாலை-05 மணி வரை வவுனியாவின் கணேசபுரம் கிராமம், நெளுக்குளத்திலிருந்து பம்பைமடு வரை, நெளுக்குளம் தொழிநுட்பக் கல்லூரி, பம்பைமடு பல்கலைக்கழகம், புளிதறித்த புளியங்குளம் கிராமம், செக்கட்டிப்புலவு கிராமம் ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
('தமிழின் தோழன்')
0 comments:
Post a Comment